என் மலர்
செய்திகள்
X
படகு பழுதானதால், நடுகடலில் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள்: கடலோர காவல் படை மீட்பு
Byமாலை மலர்26 July 2016 5:37 PM IST (Updated: 26 July 2016 5:37 PM IST)
புதுவையில் மீன் பிடிக்க சென்றபோது படகு பழுதானதால், நடுகடலில் உயிருக்கு போராடிய 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 32), மணிகண்டன் (25), சுந்தர்ராஜன் (22). மீனவர்கள்.
இவர்கள் 3 பேரும் மீன்பிடிக்க ஒரு பைபர் படகில் கடலுக்கு சென்றனர். நடுகடலில் சென்றபோது, அந்த படகில் இருந்த மோட்டார் பழுதானது. அதனை சீரமைக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் நடுகடலில் உயிருக்கு போராடினார்கள்.
இதுபற்றி கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அறிவு செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீண்குமார் மற்றும் கடலோர காவல் படையினர் நவீன மீட்பு படகில் விரைந்து சென்றனர்.
நடுகடலில், தவித்து கொண்டிருந்த 3 மீனவர்களையும் உயிருடன் மீட்டனர். பழுதான படகை ராட்சத கயிற்றால் மீட்பு படகுடன் இணைத்து கொண்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட 3 மீனவர்களை கண்டு அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

Next Story
×
X