என் மலர்
செய்திகள்
X
தண்டையார்பேட்டையில் மது குடிப்பதில் மோதல் - வாலிபருக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்28 Aug 2016 5:52 PM IST (Updated: 28 Aug 2016 5:52 PM IST)
தண்டையார்பேட்டையில் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை மேயர் பாசுவ் தெருவை சேர்ந்தவர் சேனியப்பன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (24) இருவரும் நண்பர்கள்.
நேற்று இரவு இருவரும் அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மது வாங்கினர். பின்னர் மதுவை குடிப்பதறகாக டம்ளரில் பிரித்தனர். மதுவை பிரிப்பது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
திடீரென்று இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரம் அடைந்த வின்சென்ட் கத்தியால் சேனியப்பனின் நெஞ்சு, கழுத்து பகுதியில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சேனியப்பனை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணபிரபு வழக்கு பதிவு செய்து வின்சென்டை கைது செய்தார்.

Next Story
×
X