என் மலர்
செய்திகள்
X
காந்தி படத்திற்கு கவர்னர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
Byமாலை மலர்3 Oct 2016 6:16 AM IST (Updated: 3 Oct 2016 6:16 AM IST)
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு கவர்னர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு கீழே ரோஜா இதழ்கள் மத்தியில் மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக கவர்னர்(பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர்ராவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, தீண்டாமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி நடந்தது. காந்தி சிலை அருகில் காந்தியவாதிகள் அகிம்சையை வலியுறுத்தும் பாடல்களை பாடினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷியம், கவுன்சிலர் தமிழ்செல்வன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வட்ட தலைவர் சசிக்குமார், நிர்வாகிகள் அயன்புரம் சரவணன், கடல் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் ஆகியோர் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், இணை பொதுச்செயலாளர் ஆர்.டி. சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், அமைப்பு செயலாளர்கள் பழனி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
×
X