search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேச நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்: கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச்சு
    X

    தேச நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்: கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச்சு

    தேசநலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று காந்தி பிறந்த நாள் விழாவில் கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
    சென்னை :

    மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவை பற்றி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ் பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசும்போது, “மாணவர் சமுதாயம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். தேசத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் சேவை செய்ய வேண்டும். உயர்ந்த சிந்தனையுடன் எளிமையாக வாழவேண்டும். படிப்பை மகிழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய அறிவை நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். தேசநலனுக்காக மாணவர்கள் அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும், புதிய சிந்தனையுடனும் செயல்பட வேண்டும்” என்றார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பேசினார்கள். முன்னதாக தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் நன்றி கூறினார்.
    Next Story
    ×