search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு காவல் படையில் இருந்து ஆயுதப்படைக்கு போலீசார் மாற்றம்
    X

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு காவல் படையில் இருந்து ஆயுதப்படைக்கு போலீசார் மாற்றம்

    தமிழக சிறப்பு காவல்படையில் இருந்து 6,387 முதல் நிலை காவலர்கள், ஆயுதப்படை போலீஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.
    சென்னை:

    தமிழ்நாடு இளைஞர் காவல் படையைச் சேர்ந்த 8,500 பேர் தமிழக போலீஸ் துறையில் 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 7 மாதங்களாக இவர்களுக்கு தீவிர பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சி முடிந்து 8,500 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

    இதையொட்டி தமிழக சிறப்பு காவல்படையில் இருந்து 6,387 முதல் நிலை காவலர்கள், ஆயுதப்படை போலீஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

    இவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர், சென்னை நகர ஆயுதப்படை போலீசில் சேருவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான உத்தரவை டி.ஜி.பி. (பொறுப்பு)டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×