என் மலர்
செய்திகள்
X
மருத்துவ நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் - ராமதாஸ்
Byமாலை மலர்21 Nov 2016 12:40 PM IST (Updated: 21 Nov 2016 12:40 PM IST)
மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்த மாணவர்களின் ஐயங்களும், குழப்பங்களும் இன்னும் தீரவில்லை.
இக்குழப்பங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவும் குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு மட்டும் இத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வரும் ஆண்டு முதல் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இவ்வாறு இருந்தாலும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பது தான் உண்மை.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட நிலையில், விண்ணப்பித்த மாணவர்களில் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை வெள்ளையிலும், நன்கொடையை கருப்பிலும் செலுத்தத் தயாராக இருந்தோர் மட்டுமே தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டு சேர்க்கப்பட்டனர். தகுதியிருந்தும் பணம் இல்லாதவர்களுக்கு தனியார் கல்லூரி கதவுகள் திறக்கப்படவில்லை.
மருத்துவ நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) அதன் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுவதால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் இத்தேர்வில் சாதிக்க முடியாது.
இத்தேர்வுக்காக நடத்தப்படும் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மட்டுமே வெற்றி சாத்தியமாகும். இதனால் ஏழை மற்றும் ஊரக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கனவாக மாறிவிடும்.
எனவே, தமிழகம் அதன் அனைத்து சக்தியையும் திரட்டி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராடுவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அத்துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத பள்ளிக் கல்வி அமைச்சர், வரும் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறி வருகிறார்.
அவர் தமிழக அரசின் பிரதிநிதியாக பேசுகிறாரா அல்லது தனியார் தனிப்பயிற்சி நிலையங்களின் பிரதிநிதியாக பேசுகிறாரா? என்பதே புரியவில்லை. அவரது கருத்து ஒட்டுமொத்த அமைச்சரவையின் கருத்தா? என்பதை உடல் நலம் தேறியுள்ள முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பார்த்தால், வரும் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இத்தேர்வு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நிலைமை. அதை முறியடிக்க வேண்டும் என்பது தான் நமது தேவை. அதைவிடுத்து மாணவர்களுக்கு அச்சமூட்டும் செயல்களில் அமைச்சர் ஈடுபடக்கூடாது. மாறாக....
1. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்ட வல்லுனரை அமர்த்தி வாதிட வேண்டும்.
2. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
3. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீடிக்கலாம். எனினும், தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசே நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
4. தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போலவே நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வகை செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியாக வலியுறுத்துவதுடன், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடர வேண்டும். இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தமிழக கட்சிகளும் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×
X