search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே கடையின் கூரையை பிரித்து கொள்ளை
    X

    தேனி அருகே கடையின் கூரையை பிரித்து கொள்ளை

    தேனி அருகே கடையின் கூரையை பிரித்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    தேனி அருகே பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது54). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிச் சென்றுள்ளார். மறுநாள் காலை கடையை திறந்த போது மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே உள்ளே சென்று கடையை பார்த்த போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கடையில் இருந்த 3 வயர் காயில், 11 டியூப் லைட்டுகள் மற்றும் எல்.இ.டி. லைட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வரதராஜன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இதனிடையே நேற்று நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கடமாக 2 நபர்கள் நின்றிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரித்த போது அண்ணாநகர் ராஜா மகன் புவனேஸ்வரன் (17), தெற்குத் தெரு வெங்கடேசன் மகன் மணிகண்டன் (16) பிளஸ்-2 மாணவன் என்பதும் இவர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×