என் மலர்
செய்திகள்
X
ராமமோகனராவ் மகன் வாங்கி குவித்த சொத்துக்கள் - வருமானவரி துறையினர் அதிர்ச்சி
Byமாலை மலர்26 Dec 2016 12:14 PM IST (Updated: 26 Dec 2016 12:14 PM IST)
ராமமோகனராவின் மகன் விவேக் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 500 வீடுகளை வாங்கி குவித்துள்ளது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி தனது வீடு மற்றும் அலுவலகங்களில் கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை, வேலூரில் நடந்த இந்த சோதனையின் போது கணக்கில் வராத 131 கோடி ரூபாய் பணம் கட்டு கட்டாக சிக்கியது. 150 கிலோ தங்க நகையும் பிடிபட்டது. இதில் 36 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சேகர் ரெட்டியின் தொழில் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் மணல் விற்பனை தொழிலில் கொடிகட்டி பறக்கும் சேகர்ரெட்டி, தனது சகோதரர் சீனிவாச ரெட்டி நண்பர் பிரேம் ஆகியோருடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டது.
வருமான வரி சோதனையை தொடர்ந்து சி.பி.ஐ. பிடியில் சிக்கிய சேகர்ரெட்டியும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேகர்ரெட்டியின் செல்போன் உரையாடலை ஆய்வு செய்தபோது தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சேகர்ரெட்டியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளில் பெரும் பகுதி ராமமோகனராவினுடையது என்றும் தகவல்கள் வெளியானது.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகனராவின் வீட்டில் கடந்த 21-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
தலைமை செயலகத்தில் அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. தமிழக அரசின் உயர் பதவியில் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருந்த ராம மோகனராவின் வீட்டில் மட்டுமின்றி, கோட்டையில் உள்ள அவரது அறையும் சோதனைக்குட்படுத்தப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோதனையின் போது, ரூ.100 கோடி மதிப்பிலான ஆவணங்கள், ரூ.34 லட்சம் புதிய நோட்டுகள், தங்க நகைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சேகர் ரெட்டியை போன்று ராம மோகனராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமமோகன ராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் ராம மோகனராவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்த தயாராக உள்ளனர்.
ராமமோகன ராவின் வீட்டில் சோதனை நடத்திய போது, திருவான்மியூரில் உள்ள அவரது மகன் விவேக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது வீட்டிலும் நகை-பணம், ஆவணங்கள் சிக்கின.
இதுபற்றி விசாரிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்குக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். கடந்த 24-ந்தேதியே அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவேக் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று அவர் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த தனது தந்தை ராமமோகனராவின் அதிகாரத்தை பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்களிலும் அவரது மகன் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதும், சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
விவேக்கின் நெருங்கிய நண்பர் பாஸ்கர் ரெட்டி, ஆஸ்பத்திரி ஒன்றையும், தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், ஆஸ்பத்திரிகளில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியையும் செய்து கொடுத்து வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்த பணிகளை பெற்றுக் கொடுத்ததில் விவேக் முக்கிய பங்காற்றி உள்ளார். மருத்துவ கல்வி துறை இயக்குனரகம் மூலமாக பாஸ்கர் ரெட்டியின் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் வருமான வரி துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
பாஸ்கர் ரெட்டியும், விவேக்கும், தொழில் முறை கூட்டாளிகளாகவே வலம் வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் ராமமோகனராவ் சாதகமான நிலையையடுத்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள் பலவற்றிடம் இருந்தும் ஒப்பந்த பணிகளை இவர் பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலா துறை, தென்னக ரெயில்வே ஆகியவற்றின் ஒப்பந்த பணிகளையும் பாஸ்கர் ரெட்டியும், விவேக்கும் கூட்டாக மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்திலும் விவேக் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சொகுசு வீடுகளை விவேக் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சுமார் 500 வீடுகளை இதுபோன்று அவர் வாங்கி இருக்கிறார். இதற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மூலம் ராமமோகன ராவை போல அவரது மகன் விவேக் மீதான பிடியும் இறுகி உள்ளது. அவர் மீது அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×
X