என் மலர்
செய்திகள்
X
சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Byமாலை மலர்4 Jan 2017 10:43 AM IST (Updated: 4 Jan 2017 10:43 AM IST)
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் தண்ணீர் குறைவாக இருப்பதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்க பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, இரண்டுமே ஏமாற்றிவிட்டன. வழக்கமாக தென் மேற்கு பருவமழை பெய்தால் மேட்டூர் அணை பெருகும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து வினியோகிக்கப்படுகிறது. தற்போது மேட்டூரில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
இது போல் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னை குடிநீர் ஏரிகள் பெருகும். ஆனால் இந்த ஆண்டு இந்த மழையும் ஏமாற்றிவிட்டதால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மிக குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. ஆனால் இன்றைய நிலவரப்படி 609 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. புழல் ஏரியின் கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. அதில் 432 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 82 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி.
3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 523 மில்லியன் கன அடி தண்ணீரே இருக்கிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி, ஆனால் இப்போது, 1,646 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. ஏரிகளின் இந்த தண்ணீர் சென்னை நகருக்கு ஒரு மாதம் குடிநீர் சப்ளை செய்வதற்கு மட்டுமே போதுமானதாகும்.
சென்னை நகருக்கு தினமும் 1,100 மில்லியன் லிட்டர் முதல் 1200 மில்லியன் லிட்டர் வரை குடிநீர் சப்ளை செய்யப்பட வேண்டும். தற்போது குடிநீர், குழாய் மூலம் 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இது தவிர மீதம் உள்ள குடிநீரை லாரிகள் மூலம் வினியோகம் செய்கிறார்கள்.
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில தினங்கள் வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் குறைந்த அளவே உள்ளது.
எனவே, இன்னும் ஒரு மாதத்துக்குப்பிறகு சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறையும். எனவே, ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு வரும்.
குடிநீர் குழாய் வினியோகமும் குறையும். இதனால் சென்னை நகர மக்கள் சிரமத்துக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் பெரும் அவதியை சந்திக்க நேரும்.
என்றாலும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு தயாராக இருக்கிறது. முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள், தனியார் கிணறுகள் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. அவற்றை குழாய் மூலம் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர லாரிகள் மூலமும் தெருத்தெருவாக சென்று குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. தெருக்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிந்தடிக் டேங்குகளிலும் குடிநீரை நிரப்பி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே குடிநீர் பிரச்சினை ஓரளவு சமாளிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story
×
X