என் மலர்
செய்திகள்
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பூ வியாபாரி பலி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை, எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50). பூ வியாபாரி.
இவர் சைக்கிளில் பூ எடுத்துக் கொண்டு அதியமான் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊர், ஊராக சென்று பூ வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பூ வியாபாரத்தை முடித்துக் கொண்டு சின்னசாமி சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக எர்ர அள்ளி அருகே உள்ள சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சின்னசாமியின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் சின்னசாமி பலத்த காயம் அடைந்தார்.
உடனே பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சின்னசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.