என் மலர்
செய்திகள்
X
புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு
Byமாலை மலர்4 April 2017 12:57 PM IST (Updated: 4 April 2017 12:58 PM IST)
புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. மீண்டும் ரூ. 1000 நோட்டுகளை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு வெளியிடவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
சென்னை:
ரூ. 500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு திடீரென அறிவித்தது.
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 95 சதவீத ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற்றது.
கருப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டது. மக்கள் சிரமம் நீடிக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டை அறிமுகம் செய்தது.
பழைய 500 ரூபாய்க்கு பதில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ. 500 நோட்டும் அச்சிடப்பட்டது. இதன் காரணமாக ரூபாய் நோட்டு விவகாரம் விரைவில் முடிவுக்கு வந்தது. தற்போது ரூபாய் நோட்டு சிக்கல் தீர்ந்துள்ளது.
என்றாலும் சில இடங்களில் ரூ 500, ரூ. 2ஆயிரத்தை மாற்றுவது தொடர்ந்து சிரமமாக உள்ளது. அந்த குறையையும் நிவர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி ஆலோசித்தது.
இதைத்தொடர்ந்து புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மீண்டும் ரூ. 1000 நோட்டுகளை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு வெளியிடவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

Next Story
×
X