என் மலர்
செய்திகள்
கொருக்குப்பேட்டை நேதாஜி நகரில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வீடு வீடாக ஓட்டுவேட்டை
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் நதித் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். 38-வது வார்டில் உள்ள நேதாஜி நகரில் உள்ள வீதிகளில் முன்னாள் அமைச்சரும் எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி செயலாளருமான என். ஆர். சிவபதியுடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியே வந்த பெண்களிடம் அமைச்சர் டி. ஜெயக்குமார். ‘அம்மாவின்’ அரசு இந்த பகுதி மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
துரோகிகளின் சூழ்ச்சியால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள், ஒவ்வொருவரும் ‘தொப்பி’ சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும். மேலும் புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு டி.டி.வி தினகரனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
அவர் வெற்றி பெற்றால் மட்டுமே ஆர்.கே.நகர் மேலும் வளர்ச்சி அடையும் உங்களது வாழ்க்கை மேன்மை அடையும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரம் உயரும். எனவே அம்மாவின் அரசு தொடர்ந்து 4 ஆண்டுகள் நடைபெற தொப்பி சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அப்பகுதி பெண்கள் நாங்கள் என்றுமே அம்மாவின் விசுவாசிகள் தொப்பிக்கு தான் ஓட்டு போடுவோம் என்று உறுதியளித்தனர்.