என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஸ்ரீராமானுஜர் வைணவ புத்தகம்: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஸ்ரீராமானுஜர் வைணவ புத்தகம்: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705031533556722_TN-CM-released-sri-ramanuja-vaishnava-book_SECVPF.gif)
X
வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஸ்ரீராமானுஜர் வைணவ புத்தகம்: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
By
மாலை மலர்3 May 2017 3:33 PM IST (Updated: 3 May 2017 3:33 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது அவதார விழாவின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும் “ராமானுஜர் வைணவ மாநிதி” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
சென்னை:
ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் அமைத்திடும் வகையில் ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 77 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது அவதார விழா ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில் 22.4.2017 முதல் 2.5.2017 வரை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 86 லட்சம் ரூபாய் செலவில் திருக்கோயிலில் முழுமையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் வசதிக்காக திருக்குளத்தில் தற்காலிக தடுப்புகள், குளியல் அறைகள், குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, உயர்கோபுர மின்விளக்குகள், தற்காலிக தங்கும் இடவசதி, கண்காணிப்பு கேமராக்கள், விழா நிகழ்வுகளை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக அகன்ற திரை தொலைக்காட்சிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, மருத்துவ முகாம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டன.
ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது அவதார விழாவை யொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 54 திவ்ய தேச திருக்கோயில்களிலிருந்து ஸ்ரீ ராமானுஜருக்கு மாலை மற்றும் வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.
![]( http://img.maalaimalar.com/InlineImage/201705031533556722_tn assembly._L_styvpf.gif)
மேலும், ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது அவதார விழாவின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வண்ணப்படங்களுடன் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும் “ராமானுஜர் வைணவ மாநிதி” என்ற புத்தகத்தை வெளியிட, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் மா. வீரசண்முகமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
×
X