என் மலர்
செய்திகள்
X
‘நீட்’ தேர்வை கண்டு அரசு ஏன் அச்சப்படுகிறது?: ஐகோர்ட்டு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி
Byமாலை மலர்4 May 2017 3:02 PM IST (Updated: 4 May 2017 3:02 PM IST)
‘நீட்’ தேர்வை மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும்போது, தமிழகம் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது, ‘நீட்’ தேர்வை பார்த்து தமிழகம் ஏன் அச்சம் கொள்கிறது? என ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2010ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணையை வெளியிட்டது.
அந்த அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
வருகிற 7-ந் தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் 2010ம் ஆண்டு அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற விதியை திருத்தி, நீட் தேர்வு மதிப்பெண்களுடன், 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடத்த கோரி காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.
‘நீட்’ தேர்வை மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும்போது, தமிழகம் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? ‘நீட்’ தேர்வை பார்த்து தமிழகம் ஏன் அச்சம் கொள்கிறது? நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது என்றாலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையான கல்வி தகுதி தமிழகத்தில் இல்லையா? இந்த தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு தமிழக மாணவர்களுக்கு தகுதியில்லையா? அப்படி ஒரு நிலை இல்லை என்றால், அந்த மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர் பாடம் நடத்தவில்லையா?
தகுதியான ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லையா? ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் புற்றீசல் போல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உருவாக்கியுள்ளது. தரம் இல்லாத இந்த கல்லூரிகள் தரமில்லாத ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது. அதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், இந்த வழக்கு விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளிவைப்பதாகவும், அப்போது இந்த மனுவுக்கு சி.பி.எஸ்.இ. இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story
×
X