என் மலர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே தடுப்பு கம்பியில் கார் மோதி பெண் பலி: 3 பேர் படுகாயம்
Byமாலை மலர்4 May 2017 7:31 PM IST (Updated: 4 May 2017 7:31 PM IST)
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குன்னம்:
ஐதராபாத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது 68). இவரது மனைவி சுலோச்சனா (64). செல்லத்தின் நண்பர் சாமிநாதன் (80), டாக்டர். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்கள் 4 பேரும் தமிழ் நாட்டிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி காரில் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தனர். பல இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று இரவு திருச்சி வழியாக சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை செல்லம் ஓட்ட சுலோச்சனா அருகில் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சாமிநாதனும், கிருஷ்ணகுமாரியும் அமர்ந்து இருந்தனர். கார் இன்று அதிகாலை 12.30 மணிக்கு பெரம்பலூர் மங்கள மேடு அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தில் வந்தது. அப்போது கார் திடீர் என டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியில் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சுலோச்சனா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் மங்கள மேடு போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story
×
X