என் மலர்
செய்திகள்
X
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் - திருமாவளவன்
Byமாலை மலர்15 May 2017 2:47 PM IST (Updated: 15 May 2017 2:47 PM IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நண்பனாக ஆதரிப்பேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ரஜினி இன்றுமுதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவிருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று அவர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பபட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இதனையடுத்து ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவர்கள் உடனடியாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நண்பனாக ஆதரிப்பேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும்” என்றார்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் பற்றி பேசி வருகிறார், அடுத்த 50 ஆண்டுகளுக்கும் பேசுவார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதஸ் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை ரசிகர்களிடைய ரஜினி பேசும்போது, ”சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்றுமுதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறேன். என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.
ஏதாவது திரைப்படம் வந்தால் மட்டும் ரஜினி ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார் என்று சொல்லுகிறார்கள். ரசிகர் துணையால் அப்படி நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உள்ளது. அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பபட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன்” என்று கூறினார்.
Next Story
×
X