என் மலர்
செய்திகள்
X
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து
Byமாலை மலர்31 May 2017 9:40 AM IST (Updated: 31 May 2017 11:15 AM IST)
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீ குமரன் தங்க மாளிகை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த துணிக்கடை மற்றும் நகைக்கடை இயங்கி வருகிறது.
‘சென்னை சில்க்ஸ்’ துணிக்கடை 7 மாடிகளை கொண்டது. இந்த கடையின் கீழ் தளத்தில் சேலைகள் உள்ளன. முதல் தளம், 2-வது தளம், 3-வது தளம், 4-வது தளம், 5-வது தளம், 6-வது தளம் ஆகிய பகுதிகளில் ஆண்கள் ஆடைகள், பெண்கள் ஆடைகள், சிறுவர்-சிறுமியர் ஆடைகள், ரெடிமேட் ஆடைகள் போன்றவை தனித்தனி பிரிவுகளாக இடம் பெற்றுள்ளது. 7-வது மாடியில் ஊழியர்களுக்கான உணவு கேண்டீன் உள்ளது.
அதே போல் அதன் ஒருங்கிணைந்த கடையான ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் தங்க நகைகள், வெள்ளி நகைகள் தனித்தனி தளங்களில் உள்ளன.
நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடை பூட்டப்பட்டது. கடையின் 7-வது மாடியில் உள்ள கேண்டீன் பகுதியில் ஊழியர்கள் சிலர் தங்கி இருந்தனர்.
சென்னை சில்க்ஸ் கடையின் கீழ் தளத்தில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நகைக்கடையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீ அருகேயுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடைக்கும் பரவியது. இதனால் கடையில் இருந்து வெளியே புகை வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தளங்களுக்கும் தீ, புகை பரவியது.
இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை தூக்கிவிட்டு தீயணைப்பு பணியை தொடங்கினார்கள். இதற்கிடையே கடை ஊழியர்களும் அங்கு திரண்டனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஊழியர்கள் கீழ் தளத்தில் உள்ள நகைக்கடையில் இருந்து விலை உயர்ந்த நகைகள் மற்றும் தங்க நகைகளை பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.
இதற்கிடையே கடையின் 7-வது மாடியில் உள்ள கேண்டீன் பகுதியில் ஊழியர்கள் சிலர் தங்கி இருப்பதாக தீயணைப்பு வீரர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேனாம்பேட்டையில் இருந்து மிகவும் உயரமான ஹைட்ராலிக் தீயணைப்பு வாகனம் அங்கு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் 7-வது மாடியில் இருந்த 14 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே கடையின் கீழ்தளத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். துணிகள் எரிந்ததால் கரும்புகை வெளியில் வந்து கொண்டே இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் வெளியில் இருந்தபடியே தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
கடை முழுவதும் வெப்பம் பரவியதால் ஷோகேஸ் கண்ணாடிகள், அலங்கார பொருட்கள் வெடித்து சிதறின. கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் வெளியே வரை கேட்டதால் அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்தவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். கடையினை சுற்றி உள்ள ஜன்னல்கள் வழியாக புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரமாக போராடியும் தீயணைப்பு வீரர்களால் கடையில் இருந்து வெளியேறிய புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து தீயணைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த தீ விபத்தில் சென்னை சில்க்ஸ்சின் பல மாடிகளில் இருந்த கோடிக்கணக்கான துணிகள் எரிந்து நாசமானது. நகைக் கடையில் இருந்த சிறிய வகை தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளும் உருக்குலைந்தன.
தீ தொடர்ந்து பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தினார்கள். சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை சில்க்ஸ்சின் அடித்தளபகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் பொது மக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
சென்னை சில்க்ஸ் கடையின் அடித்தள பகுதியில் மின்சார பெட்டிகள் உள்ளன. அங்கு ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் சாகுல் அமீது தெரிவித்தார்.
தீ தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்களும் கடும் முயற்சி செய்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதிகாலையில் இந்த தீ விபத்து நடந்ததால் நல்ல வேளையாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பகல் நேரத்தில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும்.

Next Story
×
X