என் மலர்
செய்திகள்
தர்மபுரி அருகே வீடு-ஓட்டலில் திருட்டு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி, வி.வி.சிங் தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
பின்னர் கோபி குடும்பத்துடன் இன்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகளும் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தர்மபுரி பைபாஸ் ரோடு நெசவாளர் காலனியில் ஓட்டல் ஒன்று உள்ளது. நேற்று ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்கு எதிர்ப்பு தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து நெசவாளர் காலனியில் உள்ள ஓட்டலும் மூடப்பட்டது.
இதனை நோட்டமிட்டு யாரோ மர்மநபர் அந்த ஓட்டலின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே புகுந்து ஓட்டலில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.