என் மலர்
செய்திகள்
திருப்பூரில் என்ஜினீயரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
திருப்பூர்:
திருப்பூர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் யஸ்வதி (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர் என்ஜினீயரிங் படிப்புக்கு தற்போது வேலை வாய்ப்பு இல்லை. அதனால் பட்டப்படிப்பு படி நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறி திருப்பூர் குமரன் கல்லூரியில் மகளை சேர்த்தனர்.
என்ஜினீயரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் இருந்த யஸ்வதிக்கு அவரது தோழிகள் போன் செய்து நாங்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டோம் என்று கூறினர். இதனால் விரும்பிய படிப்பை படிக்க முடியாத விரக்தியில் யஸ்வதி இருந்தார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த மகளை பெற்றோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.