என் மலர்
செய்திகள்
X
ராயபுரத்தில் பட்டப்பகலில் ரெயில் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் 95 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்19 Aug 2017 9:04 AM IST (Updated: 19 Aug 2017 9:04 AM IST)
சென்னை ராயபுரம் பகுதியில் பட்டப்பகலில் ரெயில் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் 95 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
சென்னை ராயபுரம், அர்த்தன் ரோடு, முனுசாமி தோட்டம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 43). ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார். இவருடைய மனைவி கலாவதி (40). இவர், தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் யமுனா என்ற மகள் உள்ளார்.
இரண்டு மாடிகள் கொண்ட இவர்களது வீட்டில் தரை தளத்தை வாடகைக்கு விட்டு உள்ளனர். முதல் மற்றும் 2-வது தளத்தில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை முத்துசாமி, அவருடைய மனைவி கலாவதி இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்று விட்டனர். யமுனாவும், கல்லூரிக்கு சென்று விட்டார்.
வேலை முடிந்து மதியம் 2.30 மணியளவில் முத்துசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது முதல் மாடியில் உள்ள கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 65 பவுன் நகைகள் மற்றும் மற்றொரு அறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகள் என 95 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story
×
X