என் மலர்
செய்திகள்
X
சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்19 Aug 2017 2:33 PM IST (Updated: 19 Aug 2017 2:33 PM IST)
சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி தமிழகம் முழுவதுமே விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.சென்னையிலும் பல இடங்களில் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு சென்னை மாநகர் முழுவதும் 2691 சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். மிகப்பெரிய விநாயகர் சிலைகளை மட்டுமே போலீசார் கணக்கில் வைப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் அதே அளவுக்கே விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்கு போலீசார் அனுமதிப்பார்கள் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் கூடுதலாக மேலும் சில இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் சுமார் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று தெரிகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் ஒருவாரம் பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படும். இதற்காக மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது பற்றி போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் வந்தது. அப்போது 4 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
இந்த ஆண்டும் அதே போன்று 4 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்கும் என்று விழா குழுவினர் காத்திருக்கிறார்கள்.
அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் 600 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலை கொண்டாட்டத்தின் போது என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது பற்றியும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் விழா குழுவினர் 24 மணி நேரமும் போலீசாருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், தீப்பிடிக்காத கூரையை வேய வேண்டும், ஊர்வலத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story
×
X