search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    X

    போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். மேலும், போராடும் ஆசிரியர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த அந்த பதில் மனுவில், போராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 43508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வேலை நிறுத்தம் செய்யும் நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×