என் மலர்
செய்திகள்
X
கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் அரசு ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
Byமாலை மலர்24 Oct 2017 4:05 PM IST (Updated: 24 Oct 2017 4:05 PM IST)
கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் அரசு ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராயபுரம்:
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்றவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க அவர் உத்தரவிட்டார்.
பின்னர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு ஆஸ்பத்திரிகள் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனை செய்ய ‘செல்’ கவுண்டர் அமைக்க ரூ.4 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தை காட்டிலும் டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சியில் குறும்படம் வெளியிடப்படுகிறது. அரசு 870 தனியார் மருத்துவமனைகளில் 100 சதவீதம் முதல்- அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுபோல அரசு ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் மருத்துவமனை வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம், உள்தங்கும் மருத்துவர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story
×
X