என் மலர்
செய்திகள்
X
ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்காத சென்னை - வடகிழக்கு பருவமழையை சமாளிக்குமா?
Byமாலை மலர்1 Nov 2017 8:55 AM IST (Updated: 1 Nov 2017 8:56 AM IST)
சாலைகள் ஆறாகவும், சுரங்கப்பாதைகள் குளங்களாகவும் மாறி ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் சென்னை நகரம் வடகிழக்கு பருவமழையை சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை:
வறட்சியால் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் குளம், குட்டைகள், ஏரிகள் வறண்ட பாலைவனம் போன்று காட்சி அளித்தன. தண்ணீருக்காக மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. எப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவேளையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் பகலிலும், இரவிலும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது.
பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலை முழுவதும் தனித்தீவு போன்று தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அங்கே வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
கொரட்டூர், வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர், கீழ்ப்பாக்கம், சூளை, ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
பெரம்பூர், அம்பத்தூர், மாதவரம் உள்பட பெரும்பாலான சாலைகள் மழைநீரால் சூழப்பட்டு ஆறுகள் போன்று காட்சியளித்தன. இதில், வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன. வியாசர்பாடி ஜீவா, கல்யாணபுரம், பெரம்பூர் முரசொலி மாறன் சாலை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி குளங்களாக மாறி உள்ளன. அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் வெகுதூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வியாசர்பாடி ஜீவா ரெயில்வே சுரங்கப்பாதையை நேற்று காலை கடக்க முயன்ற மாநகர பஸ் சிக்கி பழுதாகி நின்றது. பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் கிரேன் உதவியுடன் அந்த பஸ்சை இழுத்து பணிமனைக்கு கொண்டு சென்றனர். நீண்ட தூரம் சுற்றி வந்தால் நேரமும், பெட்ரோல் வீணாகும் என்று கருதிய வாகன ஓட்டிகள் தங்களுடைய மோட்டார் சைக்கிளை தட்டு ரிக்ஷாவில் ஏற்றி சுரங்கப்பாதையை கடந்து சென்றனர். இதற்கு 50 ரூபாய் கொடுத்தனர்.
சென்னை நகரில் நேற்று முன்தினம் மழை கொட்டி தீர்த்தாலும், நேற்று சூரியனை பார்க்க முடிந்தது. லேசாக வெயிலும் அடித்தது. இதனால் சில இடங்களில் தேங்கிய தண்ணீர் வற்றியது. எனினும் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் அடைப்புகள் நிரம்பி வழிந்ததால், தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தொடர்ந்து தேங்கி நிற்கின்றன.
சில இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரை பொதுமக்களே மோட்டார்கள் மூலம் அகற்றினர். சாலைகள், சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடி, மின்னலால் சில இடங்களில் டிரான்ஸ்பார்மர் செயல் இழந்து மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
ஒரு நாள் மழைக்கே சென்னை நகரில் திரும்பிய திசை எல்லாம் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால், வடகிழக்கு பருவமழை ஆரம்பமே மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை காலம் முழுவதையும் சென்னை எப்படி சமாளிக்க போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை நகரம் 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது போன்று, தற்போது மீண்டும் அது போன்று நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Next Story
×
X