search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
    X

    சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

    மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்காக சென்னையில் 16 மண்டலங்களுக்கும் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    பருவ மழை தொடங்கி இருப்பதால் சென்னையில் மழை நீர் தேங்கி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் இதற்காக 16 மண்டலங்களுக்கும் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தொழில்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளனர்.

    நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு:-

    1. கே.நந்தகுமார்-சர்வ சிக்‌ஷ அபியான் மாநில திட்ட இயக்குனர், திருவொற்றியூர் மண்டலம்-1, செல்-94451 9001.
    2. மரியம் பல்லவி பல்தேவ்- வணிகவரித்துறை இணை ஆணையாளர், மணலி மண்டலம்-2, செல்- 75502 25802, 94451 9002.
    3. சந்தோஷ்பாபு- ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர், மாதவரம் மண்டலம்-3, செல் - 75502 25803, 94451 90003.
    4. டி.என்.வெங்கடேஷ்- கோஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர், தண்டையார்பேட்டை மண்டலம்-4, செல் - 75502 25804, 94451 90004.
    5. பி.உமாநாத்- தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர், ராயபுரம் மண்டலம்-5, செல்- 75502 25805, 94451 90005.

    6. சி.காமராஜ்- பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, திரு.வி.க.நகர் மண்டலம்-1, செல் - 75502 25806, 94451 90006.
    7. எம்.பாலாஜி- வணிக வரித்துறை இணை ஆணையாளர், அம்பத்தூர் மண்டலம்-7, செல் - 75502 25807, 94451 90007.
    8. ஆர்.ஆனந்தகுமார்- நிதித்துறை கூடுதல் செயலாளர், அண்ணாநகர் மண்டலம்-8, செல் - 75502 25808, 94451 90008.
    9. ஆர்.செல்வராஜ்- அச்சு மற்றும் காகித நிறுவன மேலாண் இயக்குனர், தேனாம்பேட்டை மண்டலம் -9, செல் - 75502 25809, 94451 90009.
    10. சி.விஜயராஜ் குமார்- சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர், கோடம்பாக்கம் மண்டலம்-10, செல் - 75502 25810, 94451 90010.

    11. ஆர்.கிஷோர்குமார்- தமிழ்நாடு வாணிப கழக உறுப்பினர் செயலாளர், வளசரவாக்கம் மண்டலம்-11, செல் - 75502 25811, 94451 90011.
    12. கிரண்குர்ராலா - குடும்ப நலத்துறை துணை செயலாளர், ஆலந்தூர் மண்டலம்-12, செல் - 75502 25812, 94451 90012.
    13. மைதிலி கே.ராஜேந்திரன்-, பொதுத்துறை கூடுதல் செயலாளர், அடையாறு மண்டலம்-13, செல் - 75502 25813, 94451 90013.
    14. ஆர்.பழனிசாமி- சுரங்கத்துறை ஆணையாளர், பெருங்குடி மண்டலம்-14, செல் - 75502 25814, 94451 90014.
    15. தாரேஸ் அகமது- மாநில ஊரக சுகாதாரத் திட்ட இயக்குனர், மண்டலம்-15, செல் - 75502 25815, 94451 90015.

    16. அனுஜார்ஜ்- சர்க்கரை உற்பத்தி கழக இயக்குனர், மாநகராட்சி தலைமையிடம்- செல் - 75989 60125.
    Next Story
    ×