என் மலர்
செய்திகள்
X
மழை வெள்ளம் பற்றி கேட்ட பத்திரிகையாளரை மிரட்டுவதா?: அமைச்சர் வேலுமணிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
Byமாலை மலர்1 Nov 2017 3:22 PM IST (Updated: 1 Nov 2017 3:22 PM IST)
மழை வெள்ள பாதிப்பு உண்மை நிலவரம் குறித்து கருத்து கேட்ட நிருபரை, மிரட்டும் பாணியில் பேசிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வடகிழக்குப் பருவ மழையினால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பல பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தினால் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், வீடுகளுக்கு திரும்ப முடியாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.
சாலைகளில் நிரம்பி நிற்கும் மழைநீரால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகி, ஒருநாள் மழையைக் கூட தாங்க முடியாமல் சென்னை மாநகரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மழை நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ, “அமெரிக்காவைப் போல் நிவாரணப் பணிகள் நடக்கின்றன”, என்று கூச்சமே இல்லாமல் மக்களின் துயரத்தை ‘நகைச்சுவை’ என்று எண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.
“மழை நீர் வடியவில்லை”, என்ற உண்மை நிலவரத்தை அமைச்சரிடம் சுட்டிக் காட்டும் நிருபரை, “உன் பெயர் என்ன?”, என்று கேட்டு மிரட்டுகிறார். அதேபோல, “சர்க்கரை விலையை 25 ரூபாயாக உயர்த்தியதால் பாதிப்பு இல்லை”, என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். “’டெங்கு காய்ச்சலுக்கு எய்ம்ஸ் நிபுணர் குழு அனுப்பக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்”, என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை மறந்து, நாட்டின் பிரதமர் யார் என்பதையும் மறந்து பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இதுவரை 35 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார்கள். ‘குதிரை பேர’ ஆட்சியின் கமிஷன் கலாச்சாரத்திற்கும், அமைச்சர்கள் கைநீட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பமிட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்க முடியாத அதிகாரிகளும், “தமிழகத்தில் பணியாற்ற முடியாது”, என்று கருதி, இத்தனை பேர் மத்திய அரசு பணிக்கு சென்றிருப்பது தமிழக அரசின் நிர்வாகத் தோல்விக்கு சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்து இருக்கிறது.
எஞ்சியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் திறமையான பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு “டம்மி போஸ்டிங்” கொடுத்து, அவர்களின் திறமையை தமிழக மக்களுக்காக பயன்படுத்தாமல் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் வீணடிக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.
இப்படி ஆட்சி பணி நிர்வாகத்தில் உள்ள திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பந்தாடப்படுவதற்கு தலைமைச் செயலாளரே துணை போகிறார் என்பது மிகவும் வேதனையளிப்பதாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த அ.தி.மு.க. அமைச்சரவையும் செயலிழந்து கிடக்கின்ற இந்த நேரத்தில், துறையின் செயலாளர்கள், தலைவர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் போன்ற பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதுதான் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஆனால், அந்த நிர்வாக அமைப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசு இன்று சிதைத்து விட்டது கவலையளிக்கிறது.
குறைந்தபட்சம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால், இப்போது ஒரே நாள் மழைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளிதில் தடுத்திருக்க முடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஆகவே, ‘அரசியலை’ ஒதுக்கி வைத்துவிட்டு, ‘ஆளுங்கட்சி’ என்பதையும் மறந்துவிட்டு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
‘நிர்வாக பேரிடர்’ ஏற்பட்டு தமிழக அரசு பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ள இந்தநேரத்தில், மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாநிலத்திற்கு திரும்பி, மக்கள் பணியாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி, பொறுப்பான எதிர்கட்சி என்ற முறையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை தி.மு.க. வழங்கும் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story
×
X