என் மலர்
செய்திகள்
X
திண்டிவனம் அருகே கந்துவட்டி கொடுமை விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Byமாலை மலர்1 Nov 2017 3:45 PM IST (Updated: 1 Nov 2017 3:45 PM IST)
திண்டிவனம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் தொடர்பாக சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வடசிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம்(வயது 55). விவசாயி. இவரது மனைவி ஜெயவேணி(45). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஜெயவேணி வெள்ளிமேடுபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர் தனது தேவைக்காக சொத்து பத்திரங்களை வைத்து சில இடங்களில் கடன் வாங்கியிருந்தார். அதற்கு வட்டிகட்டமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இவர் தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் மற்றொரு சத்துணவு அமைப்பாளர் சந்திரபாபுவிடம் தனக்கு கடன் அதிகம் உள்ளது. தனக்கு பணஉதவி செய்யுமாறு கேட்டார். இதை சந்திரபாபு ஏற்று ஜெயவேணி கடன் தொகையை செலுத்திவிட்டு சொத்துபத்திரங்களை மீட்டார்.
பின்னர் சிங்காரமும் அவரது மனைவி ஜெயவேணியும் பத்திரபதிவு அலுவலகத்தில் சந்திரபாபு கொடுத்த பணத்திற்காக பதிலாக தங்களின் சொத்து பத்திரங்களை அவரிடம் அடமானமாக எழுதி கொடுத்தனர்.
இந்தநிலையில் மாதந்தோறும் ஜெயவேணியின் சம்பளப்பணத்தில் சந்திரபாபுவுக்கு வட்டித்தொகை செலுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக அவர்கள் வட்டிபணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சந்திரபாபு சிங்காரத்தின் வீட்டிற்கு சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை வட்டியுடன் தருமாறு கேட்டார். தனக்கு தர வேண்டிய பணத்தை நீங்கள் சரியாக செலுத்தவில்லை.
எனவே என்னிடம் உள்ள பத்திரத்தை விற்று பணத்தை எடுத்துக் கொள்வதாக கூறினார்.
இதனால் மனமுடைந்த சிங்காரம் நேற்று மாலை அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் சிங்காரத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரபாபுவை கைது செய்தனர்.

Next Story
×
X