என் மலர்
செய்திகள்
பெரம்பலூர் சீரடி சாய்பாபா கோவிலில் குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் தரிசனம்
பெரம்பலூர்:
பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, அதற்கான குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டுயாக சாலை பூஜைகள் நடைபெற்றன. கடந்த வியாழக்கிழமையன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.
அதனை பெரம்பலூர் வழிவிடு விநாயகர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளுடன் சாய்பாபா கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு நடைபெற்றது. யாத்ரா தானம், சீரடி சாய்பாபா, விநாயகர் ஆஞ்சநேயர் போன்ற பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவை காண பெரம்பலூர், எளம்பலூர், வடக்கு மாதவி, செங்குணம், எம்.ஜி. ஆர்.நகர். ராஜீவ் நகர், உப்போடை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.