என் மலர்
செய்திகள்
X
குடிபோதையில் நண்பரை மதுபாட்டிலால் குத்திய என்ஜினீயர் கைது
Byமாலை மலர்6 Feb 2018 9:16 AM IST (Updated: 6 Feb 2018 9:16 AM IST)
கொடுங்கையூரில் குடிபோதையில் நண்பரை மது பாட்டிலால் குத்திய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). என்ஜினீயரிங் படித்துள்ள இவர், ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்களை கட்டிக்கொடுக்கும் பணி செய்து வந்தார்.
எருக்கஞ்சேரி கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தியேந்திரன் (32). இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் எத்திராஜ் சாலையில் உள்ள மதுக்கடைக்கு இருவரும் மது அருந்த சென்றனர்.
அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தினர். குடிபோதையில் வெங்கடேசனுக்கும், சக்தியேந்திரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், மது பாட்டிலால் சக்தியேந்திரனின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்தியேந்திரனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஒரு வருடத்திற்குமுன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசனை சக்தியேந்திரன் தாக்கினார். இதனை மனதில் வைத்துக்கொண்டு அவரை மதுபாட்டிலால் குத்தியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வெங்கடேசனை கைது செய்து புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். #tamilnews

Next Story
×
X