search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நந்தனத்தில் விநாயகர் கோவிலை இடிக்காமல் ஒரு அடி நகர்த்தி வைப்பு
    X

    நந்தனத்தில் விநாயகர் கோவிலை இடிக்காமல் ஒரு அடி நகர்த்தி வைப்பு

    நந்தனத்தில் உள்ள விநயாகர் கோவிலை இடிக்காமல் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டு அதன் அடியில் ஜாக்கிகளை நிறுவி அங்குலம் அங்குலமாக நகர்த்தினார்கள்.
    சென்னை:

    நந்தனம் சி.ஐ.டி. நகர் பெரிய ஸ்ரீராமர் பேட்டை சாலையில் சதுர்புஜ சக்தி கணேச விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் 1942-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    கோவில் அமைந்துள்ள சாலை தி.நகரில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் சாலையாக உள்ளது. ஒரு வழிபாதையாக உள்ள இச்சாலையில் மாநகர பஸ், வாகனங்கள் என எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும்.

    இதனால் கோவிலில் சாமி கும்பிடும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. கோவிலை சுற்றி வரும்போது வாகனங்கள் மோதுவதால் விபத்துகள் ஏற்பட்டன.


    இதையடுத்து அப்பகுதி மக்கள் கோவிலை இடிக்காமல் ஒரு அடி தூரத்துக்கு சாலையில் இருந்து கோவிலை உள்ளே தள்ளி நகர்த்தி வைக்க முடிவு செய்தனர். இதற்காக தனியார் நிறுவனத்தை அணுகி ஏற்பாடுகள் நடந்தன.

    கடந்த 29-ந்தேதி பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலை கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவிலை நகர்த்தி வைக்கும் பணி தொடங்கியது. கோவிலை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டு அதன் அடியில் ஜாக்கிகளை நிறுவி அங்குலம் அங்குலமாக நகர்த்தினார்கள்.

    மேலும் பள்ளத்தில் இருந்த கோவில் 3 அடி உயரத்துக்கு தூக்கி வைக்கப்படுகிறது. சாலையில் இருந்து ஒரு அடி தூரத்துக்கு கோவிலை நகர்த்தும் பணி இன்று மாலை முடிவடையும். ஏப்ரல் 29-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×