search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 தினசரி பஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தம் - வாராந்திர பாஸ் கட்டணம் அதிகரிப்பு
    X

    ரூ.50 தினசரி பஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தம் - வாராந்திர பாஸ் கட்டணம் அதிகரிப்பு

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கும் 50 ரூபாய் தினசரி பாஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #BusFareHike
    சென்னை:

    தமிழகத்தில் அரசுப்பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடந்த மாதம் கனிசமாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் இறங்க, கட்டண உயர்வை சிறிதளவு குறைத்து அரசு அறிவித்தது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் ஒருநாள் பயண டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆகியவை உயராது என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1000 ரூபாய் மாத பஸ் பாஸ் 1300 ரூபாய் ஆக உயர்வதாகவும், 50 ரூபாய் ஒரு நாள் பயண டிக்கெட் 80 ரூபாய் உயர்வதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின.

    ஆனால், பஸ் பாஸ் கட்டண உயர்வு என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கமளித்தார். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, “1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாஸில் எந்த மாற்றமும் இல்லை, அது தொடர்ந்து வழங்கப்படும். தினசரி வழங்கப்படும் 50 ரூபாய் டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ரூ.240-க்கு வழங்கப்படும் வாராந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.320 ஆக உயர்த்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×