என் மலர்
செய்திகள்
X
10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
Byமாலை மலர்1 March 2018 2:56 PM IST (Updated: 1 March 2018 2:56 PM IST)
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை நெசப்பாக்கம் பாரதிநகர் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). வணிக நிறுவனங்கள், கடைகளில் காண்டிராக்ட் எடுத்து உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சுளா. அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். ரித்தேஷ் சாய் தினமும் பள்ளி முடிந்ததும் மாலையில் இந்தி டியூஷனுக்கு செல்வது வழக்கம்.
அவனை தந்தை கார்த்திகேயன் டியூசனுக்கு கொண்டு விட்டுவிட்டு மீண்டும் 8.30 மணியளவில் வீட்டுக்கு அழைத்து வருவார்.
நேற்று மாலை ரித்தேஷ் சாயை, கார்த்திகேயன் இந்திய டியூசனுக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவு 8.30 மணியளவில் மீண்டும் அழைத்து வர சென்றார். ஆனால் டியூசன் வகுப்பில் ரித்தேஷ் சாய் இல்லை. அவனை எங்கே என்று விசாரித்த போது கண்ணில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி நாகராஜ் என்பவர் ஏற்கனவே அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.
இது பற்றி கார்த்திகேயன் எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நாகராஜ் தனது மகனை கடத்தி சென்றதாக புகாரில் கூறியிருந்தார். நாகராஜின் போன் நம்பரையும் போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் கடத்தப்பட்ட சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். நாகராஜின் செல்போன் நம்பரை வைத்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர்.
இன்று அதிகாலையில் வேலூர் பஸ் நிலையத்தில் நாகராஜ் நிற்பது செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து வேலூர் பஸ் நிலையத்தில் நாகராஜை போலீசார் மடக்கி பிடித்தனர். அவனை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சிறுவன் ரித்தேஷ் சாயை இரவு 8 மணிக்கே அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தான். இந்த தகவலை கேட்டதும், சிறுவனின் தந்தை கார்த்திகேயன் அதிர்ச்சியில் உறைந்தார். சிறுவனின் பிணம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் கிடப்பதாகவும் நாகராஜ் கூறினான்.
போலீசார் சேலையூரில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சிறுவன் ரித்தேஷ் சாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து மூளை சிதறி காணப்பட்டது. கழுத்திலும் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது.
நாகராஜுக்கும், சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததும் அதனால் ஏற்பட்ட தகராறில் சிறுவனை நாகராஜ் கொலை செய்ததும் தெரிய வந்தது. நாகராஜ் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் சேலையூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன்.
எனக்கும், கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. நாங்கள் இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளோம். சிறுவன் ரித்தேஷ் சாயை நான் பலமுறை டியூசனில் இருந்து அழைத்து சென்று மஞ்சுளாவின் வீட்டில் விட்டிருக்கிறேன்.
எங்கள் கள்ளக்காதல் கார்த்திகேயனுக்கு தெரிய வந்தது. அவர் இதை கண்டித்தார். ஆனால் நாங்கள் தொடர்பை துண்டிக்கவில்லை. கார்த்திகேயன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு என் மீது எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினார்.
இதனால் மனம் உடைந்த நான் அவரை பழிவாங்க சிறுவன் ரித்தேஷ் சாயை கொலை செய்ய முடிவு செய்தேன்.
நேற்று மாலை ரித்தேஷ் சாயை இந்தி டியூசன் வகுப்பில் இருந்து அழைத்துக் கொண்டு சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றேன். அங்கு அவனது கழுத்தில் பீர் பாட்டிலை உடைத்து குத்தினேன். அவன் அலறி துடித்தான். பின்னர் இரும்பு கம்பியால் அவனது தலையில் அடித்தேன். அவன் சுருண்டு விழுந்து இறந்தான். பின்னர் அங்கிருந்து தப்பி வேலூருக்கு சென்றேன். அங்கு வைத்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு நாகராஜ் போலீசிடம் கூறினார்.
சிறுவன் ரித்தேஷ் சாய் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #Tamilnews

கொலையாளி நாகராஜ்

Next Story
×
X