என் மலர்
செய்திகள்
X
மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு
Byமாலை மலர்17 Jun 2018 9:09 AM IST (Updated: 17 Jun 2018 9:09 AM IST)
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MetroTrain
சென்னை:
சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஸ்வநாதன் என்பவர் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
கடந்த மாதம், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலும், டி.எம்.எஸ் முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும் என 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கின்ற போதிலும் ரெயில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
புறநகர் மின்சார ரெயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்களில் மிக குறைவான கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஆனால், மெட்ரோ ரெயில்களில் குறைவான தூரத்துக்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புறநகர் மின்சார ரெயில்களை விட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை மெட்ரோ ரெயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அதேபோன்று தனியார் ஆதிக்கத்தை தவிர்க்க மெட்ரோ ரெயில் சேவையை, இந்திய ரெயில்வே துறையே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #MetroTrain #highcourt

Next Story
×
X