என் மலர்
செய்திகள்
X
சென்னையில் கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு
Byமாலை மலர்8 July 2018 12:35 PM IST (Updated: 8 July 2018 12:35 PM IST)
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து மு.க.அழகிரி உடல் நலம் விசாரித்தார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு சளி தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் தொண்டையில் ‘டியூப்’ பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவரால் முழுமையாக பேச முடியவில்லை. ஓரிரு வார்த்தைகள்தான் பேச முடிகிறது.
கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். மகன் மு.க.அழகிரி சென்னை வரும் சமயங்களில் கருணாநிதியை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் இன்று சென்னை வந்திருந்த மு.க.அழகிரி காலை 10.45 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
தயாளு அம்மாளிடம் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு மாடிக்கு சென்று கருணாநிதியுடன் 10 நிமிடம் அமர்ந்திருந்து பேசினார்.
மு.க.அழகிரி கருணாநிதியை சந்திக்க வந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர். ஆனால் அழகிரி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பின்புற வாசல் வழியாக சகோதரி செல்வியுடன் காரில் ஏறி அவரது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

Next Story
×
X