என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![கிருமாம்பாக்கம் அருகே தனியார் நிறுவன காவலாளி கார் மோதி பலி கிருமாம்பாக்கம் அருகே தனியார் நிறுவன காவலாளி கார் மோதி பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Sep/201809051510425082_car-collide-private-company-security-death_SECVPF.gif)
X
கிருமாம்பாக்கம் அருகே தனியார் நிறுவன காவலாளி கார் மோதி பலி
By
மாலை மலர்5 Sept 2018 3:10 PM IST (Updated: 5 Sept 2018 3:10 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கிருமாம்பாக்கம் அருகே தனியார் நிறுவன காவலாளி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே தமிழக பகுதியான ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுப்பாளையம் சிவனார்புரம் சாலையை சேர்ந்தவர் காசிதுரை (வயது55). இவர் புதுவை- கடலூர் ரோட்டில் உள்ள சீனுவாசா கார்டனில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது புதுவையில் இருந்து கிருமாம்பாக்கம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பின்னர் பதட்டத்தில் காரை ஓட்டி சென்ற டிரைவர் சிறிது தூரத்தில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த காசிதுரையை கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் ஆகியோர் விரைந்து வந்து மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காசிதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×
X