search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி- மத்திய அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
    X

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி- மத்திய அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசின் சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது குறித்து என்.ஆர்.தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். #MekedatuDam
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் 5912 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    மேகதாதுவில் புதிய அணை கட்டும்பட்சத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது முழுமையாக நின்று விடும். இதனால் தமிழகத்தின் விவசாயம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். மத்திய அரசு தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கிற விதமாக நடந்து கொள்வது துரதிஷ்டவசமானது. நீதிமன்றங்களின் தீர்ப்பை மதித்து சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதியை திரும்ப பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். #MekedatuDam
    Next Story
    ×