என் மலர்
செய்திகள்
X
பிரசவத்தின் போது மனைவி இறந்ததால் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்4 April 2019 6:53 PM IST (Updated: 4 April 2019 6:53 PM IST)
மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தெம்மாவூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா (24). நிறைமாத கர்ப்பிணியான கவிதா கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிரசவத்தின் போது இறந்து விட்டார். இவருக்கு பெண் குழந்தை பிறந்து மருத்துவமனையில் உள்ளது.
இதனால் மனமுடைந்த முத்துக்குமார் தூக்குபோட்டும், மருந்து குடித்தும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி விட்டனர். இந்நிலையில் நேற்று கீரனூர் ரெயில்வேகேட் அருகே காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
X