search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகராஜன்
    X
    நாகராஜன்

    மதுரை கலெக்டர் திடீர் இடமாற்றம்

    மதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று திடீரென மாற்றப்பட்டார்.
    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாவட்ட கலெக்டராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும்படி அந்த மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியும், பொதுத்துறை (தேர்தல்கள்) கூடுதல் செயலாளருமான எம்.பாலாஜி, பொதுப்பணித்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியும், பொதுத்துறை (தேர்தல்கள்) கூடுதல் செயலாளருமான வி.ராஜாராமன், நகர மற்றும் ஊரமைப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி மதுரை பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அனுமதியின்றி நுழைந்த விவகாரம் சர்ச்சையாகி பரபரப்பானது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அப்போதைய கலெக்டர் நடராஜன் அதிரடியாக மாற்றப்பட்டார். அதன்பின்னர் நாகராஜன் மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நாகராஜனும் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய கலெக்டர் நியமிக்கப்படும் வரை மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி சாந்த குமார், கலெக்டர் பணியையும் கூடுதலாக கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×