என் மலர்
செய்திகள்
X
சென்னைக்கு 10-ந் தேதி ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது
Byமாலை மலர்4 July 2019 8:20 AM IST (Updated: 4 July 2019 8:20 AM IST)
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வரும் 10-ந் தேதி ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
இதை சமாளிக்க வீராணம் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட பல்வேறு நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னைக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 525 மில்லியன் லிட்டர் என்ற அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 180 மில்லியன் லிட்டர், வீராணம் குழாய் மற்றும் நெய்வேலி நீர்ப்படுகை மூலமாக 180 மி.லி., தாமரைப்பாக்கம், பூண்டி மற்றும் மீஞ்சூர் விவசாய கிணறுகள் 95 மி.லி., புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீராதாரங்கள் 35 மி.லி., சிக்கராயபுரம் 16 மி.லி உள்பட மொத்தம் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுதவிர எருமையூரில் உள்ள கல்குவாரியில் இருந்து 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நிறைவடைந்து உள்ளன. தண்ணீரில் மிதக்கும் வகையிலான மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது.
இதற்கிடையில் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டுசெல்லும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னையில் குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
மேட்டூர் சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே கேட் வரை குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) இந்தப்பணிகள் நிறைவடைய உள்ளன.
பார்சம்பேட்டை ரெயில்வே கேட்டிற்கு அருகே கொண்டுவரப்படும் தண்ணீர் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது யார்டில் இருந்து ரெயிலில் குடிநீர் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரெயில்வே கேட்டை கடந்து யார்டின் ஒரு பகுதியில் இருந்து 4-வது யார்டு வரை குழாய்கள் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகில் 130 மீட்டர் வரை உள்ள ரெயில் பாதைக்கு அடியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இதன் வழியாக குடிநீர் பைப்லைன்களையும் கொண்டு செல்லப்படுகிறது.
தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியின் அருகே பம்பிங் மற்றும் ஜெனரேட்டர் வைக்கும் அறை கட்டுவதற்கு அளவீடு செய்து அதற்கான பணியும் நடந்து வருகிறது. அதேபோல் பம்பிங் அறை அருகே மின்வாரியத்துறை அதிகாரிகள் இதற்கென தனியாக 250 கிலோ வாட் மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த பணிகள் அனைத்தும் வரும் 8-ந் தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 9-ந் தேதி ஒத்திகை பணி நடக்கிறது. 10-ந் தேதி முதல் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வறண்டுவிட்டதால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Next Story
×
X