என் மலர்
செய்திகள்
X
காங்கயம் அருகே வேன் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்4 July 2019 3:47 PM IST (Updated: 4 July 2019 3:47 PM IST)
காங்கயம் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது தாக்கா (21). இவரது நண்பர் காங்கயம் அருகே உள்ள ராஜுயா பாளையம் பிரிவை சேர்ந்தவர் மோகன் ராஜ்(21). இவர்கள் திருப்பூர் -காங்கயம் இடையே உள்ள தனியார் கல்லூரியில் சான்றிதழ் வாங்கி விட்டு ஊத்துக்குளி-காங்கயம் ரோடு பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் மோகன் ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் முகமது தாக்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×
X