என் மலர்
செய்திகள்
X
வேலூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பு
Byமாலை மலர்27 July 2019 7:50 AM IST (Updated: 27 July 2019 8:32 AM IST)
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று இன்று வாக்கு சேகரித்தார்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என தி.மு.க. அறிவித்திருந்தது. அதன்படி, வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக பிரசாரம் செய்கிறார்.
முதல்கட்டமாக, ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 1,2,3 ஆகிய மூன்று நாட்களும் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வேலூர் உழவர் சந்தை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் நடை பயணமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். தொரப்பாடி உழவர் சந்தையில் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
Next Story
×
X