search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாபாரிகள் போராட்டம்
    X
    வியாபாரிகள் போராட்டம்

    குன்றத்தூர்-போரூர் சாலையை சரிசெய்யகோரி வியாபாரிகள் 30-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

    குன்றத்தூர்-போரூர் சாலையை சரி செய்யகோரி வியாபாரிகள் 30-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

    சென்னை:

    சென்னை போரூர் முதல் குன்றத்தூர் வரையிலான சாலையை சீர்படுத்த கோரி வியாபாரிகள் 30-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

    இதுபற்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன் கூறியதாவது:-

    சென்னை போரூர் முதல் குன்றத்தூர் வரை உள்ள சாலை படுமோசமாக உள்ளது. கடந்த 8 மாதத்துக்கு மேலாக இந்த சாலையை செப்பணிடுவதாக கூறி பள்ளத்தை மூடாமல் அரை குறையாக விட்டு வைத்துள்ளனர்.

    இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. ஜல்லி கற்கள் குவியல் குவியலாக சிதறி கிடப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் படாதபாடு பட்டு தான் சாலையில் செல்ல முடிகிறது.

    குண்டும் குழியுமாக உள்ளதால் கார், வேன் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. இந்த சாலையை கடக்க 1 மணிநேரம் ஆகிறது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் அவர்கள் அலட்சியமாக உள்ளனர். மக்கள் படும் கஷ்டங்களை அவர்கள் கண்டுகொள்வதாக தெரிய வில்லை.

    எனவே இந்த சாலையை உடனே சரிபடுத்த கோரி வியாபாரிகள் ஒன்று திரண்டு வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தி மவுலிவாக்கம் வெங்கடேஸ்வரா சுவீட் கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குன்றத்தூர் தொகுதி சார்பில், மாவட்டத் தலைவரான எனது தலைமையில் (என்.டி.மோகன்) நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.தேசிகன், மாவட்டப் பொருளாளர் ஜெ.சின்னவன் மாவட்டத் துணைத் தலைவர் சி.எம்.சாமி, இணைச்செயலாளர் டி.சீனிவாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுநல சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×