என் மலர்
செய்திகள்
X
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்19 Dec 2019 9:53 PM IST (Updated: 19 Dec 2019 9:53 PM IST)
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டில் விற்பனை செய்யும் தொழிலாளி உயிரிழந்தார்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தீவனூரில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரோஷணை காவல் நிலைய போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் விருதுநகர் மாவட்டம், பட்டம் புதூரை அடுத்த எட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் கருப்பசாமி(45), என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் இருசக்கர வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று கட்டில் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
Next Story
×
X