என் மலர்
செய்திகள்
X
போடி பகுதியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு
Byமாலை மலர்21 April 2020 3:01 PM IST (Updated: 21 April 2020 3:01 PM IST)
போடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள ஆட்டிறைச்சி கடையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் ஆயிரத்திற்கு கிடுகிடுவென உயர்ந்து விற்பனையானது.
போடி:
தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள போடி பகுதியை சேர்ந்த முந்தல், கவுல், அணைக்கரைப்பட்டி, மரக்காமலை, மீனாட்சிபுரம், பரமசிவன்கோவில் அடிவாரம், மேல சொக்கநாதபுரம், மரிமுர் உள்பட பல இடங்கள் பசுமை நிலப்பரப்பை கொண்டது. இங்கு ஏராளமான புல்வெளிகளும், சிறிய செடிகளும் உள்ளன. இந்த பசுமை நிலப் பரப்புகளை நம்பி போடி சுற்றுவட்டாரத்தில் பலர் ஆடு மேய்ச்சல் தொழில் செய்துவருகிறார்கள்.
தற்போது கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு ஆடு மேய்ச்சல்காரர்கள் யாரும் மேய்ச்சல் தொழிலுக்கு போகாமல் வீட்டில் முடங்கி விட்டனர். இதனால் ஆடுகள் மேய்ச்சலுக்குச் செல்லாமல் சரியான உணவின்றி மெலிந்து இனப்பெருக்கம் இன்றி வாடியும் உள்ளன. சில ஆடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டன. ஆடுகள் எண்ணிக்கைகள் குறைந்துவிட்டது.
இதனால் இறைச்சி விற்பனைக்கு ஆடுகள் கிடைக்காமல் இறைச்சிக் கடை வியாபாரிகள் தொழிலை தொடர முடியவில்லை. தற்போது வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் ஆட்டு இறைச்சி விற்பனை கடைகள் திறக்கப்பட்டு விற்பனையாகிறது. உள்ளூரில் ஆடுகள் கிடைக்காததால் ஆடுகளை பல்வேறு கிராமங்களிலும் வெளி மாவட்டத்திலும் கொள்முதல் செய்து விற்பனை செய்வதால் ஆட்டு இறைச்சி விலை ஒரு கிலோ ரூ.1000 மாக விற்பனை ஆகிறது.
இதுபற்றி ஆடு மேய்ச்சல்காரர் ஒருவர் கூறும்போது, ஆடு வளர்ப்புக்கு கால்நடை துறையினரும் மற்றும் மேய்ச்சலுக்காக வனத்துறையினரும் எந்தவிதமான உதவிகளையும் செய்வதில்லை. போடி பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு ஆட்டுபுலுங்கைகளை உரமாக வைப்பது குறைந்துவிட்டது. இதனால் எங்கள் வருமானமும் பாதிக்கப்பட்டது.மேலும் ஆடுகளுக்கு திடீரென நோய்கள் ஏற்பட்டு இறந்து விடுகின்றன.
எனவே ஆடு மேய்ச்சல் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கால் ஆடுகளுக்கு போதிய அளவு தீவனம் வழங்க முடியவில்லை. ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று கிடை போட்டால்தான் அவை ஆரோக்கியமாக இருக்கும். எனவே ஊரடங்கில் இருந்து ஆடு, மாடு மேய்ச்சலுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்றார்.

Next Story
×
X