என் மலர்
செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் ஆய்வக பரிசோதனையில் 183 பேர்களின் மாதிரிகள்
Byமாலை மலர்8 Jun 2020 6:59 PM IST (Updated: 8 Jun 2020 6:59 PM IST)
தேனி மாவட்டத்தில் 183 பேர்களின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி:
வெளி மாவட்டங்களில் இருந்து கம்பத்துக்கு திரும்பிய ஒருவர், பெரியகுளம் திரும்பிய ஒருவர் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தேனி, பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் 2 பேரையும் வாடகை வாகனத்தில் அழைத்து வந்த சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த டிரைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 124 நபர்களில் 105 நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். 14 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் கம்பம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்துள்ள நபர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கிருமி நாசினி பயன்படுத்துதல், முக கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றின் காரணமாக தேனி மாவட்டத்திற்கு கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story
×
X