என் மலர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்23 July 2020 3:01 PM IST (Updated: 23 July 2020 3:01 PM IST)
தர்மபுரி மாவட்டத்தில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 6 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் அஞ்ஜனஅள்ளியை சேர்ந்த 33 வயது பெண் சளி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானார். அவரை பரிசோதித்தபோது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
பென்னாகரம் அருகே உள்ள செங்கனூர் பகுதியை சேர்ந்த செல்போன் கடைக்காரரான 23 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதே பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நஞ்சனூர் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா பாதிப்பு உறுதியானது. இதேபோல் பென்னாகரம் டவுன் பகுதியை சேர்ந்த 55 வயது நில புரோக்கர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.
கொரோனா கண்டறியப்பட்ட 6 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Next Story
×
X