என் மலர்
செய்திகள்
X
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதால் பரபரப்பு
Byமாலை மலர்23 July 2020 5:45 PM IST (Updated: 23 July 2020 5:45 PM IST)
புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் விழுப்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் சிலர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அதிமுக-வை சேர்ந்த தொண்டர்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டனர். மேலும் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை முன்னிட்டு பாதுகாப்புக்காக காவல்துறையின் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அதிகாரிகள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து அங்கிருந்த அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலை மீது இருந்த காவித் துண்டை அகற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
×
X