search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரே நாளில் 236 பேருக்கு கொரோனா

    மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 115 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 12,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 8,905 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 10,605 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 5 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 430 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 487 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி பள்ளபட்டி முருகன் காலனியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, மாரனேரி பிலால்தெருவை சேர்ந்த 58 வயது நபர், அண்ணாகாலனியை சேர்ந்த 57 வயது நபர், ராஜதுரை நகரை சேர்ந்த 26 வயது நபர், முத்துமாரி காலனியை சேர்ந்த 19 வயது பெண், திருவள்ளூவர் காலனியை சேர்ந்த 39 வயது பெண், பள்ளப்பட்டி மாரியப்பன்நகரை சேர்ந்த 41 வயது நபர், முருகன் காலனியை சேர்ந்த 44,37 வயது பெண்கள், முத்துமாரிஅம்மன்நகரை சேர்ந்த 36 வயது நபர், 31 வயது பெண், அயன்வீதியை சேர்ந்த 40 வயது நபர், பள்ளபட்டி ரோட்டை சேர்ந்த 68 வயது மூதாட்டி, திருவள்ளூவர் காலனியை சேர்ந்த 40 வயது பெண், ஜெயக்கொடி வீதியை சேர்ந்த 23 வயது பெண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் ராஜபாளையம், பந்தல்குடி, திருச்சுழி, கல்லூரணி, நரிக்குடி, காரியாபட்டி, இருஞ்சிறை, மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 28 வயது பெண், நக்கலக்கோட்டை கல்குவாரியை சேர்ந்த 57 வயது நபர், ஆமத்தூர் தனியார் வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 25 வயது நபர், ராமசாமிபுரம், அருப்புக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி நகராட்சியில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12,766 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மருத்துவ பரிசோதனை முடிவுகள் முறையாக தெரிவிக்கப்படுவது இல்லை. முடிவுகள் தெரிவிக்கப்படுவதில் வெளிப்படை தன்மை தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட முடிவுகளில் எத்தனை பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, எந்த தேதியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இம்மாவட்டத்தில் நோய் பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    ஆனாலும் மாவட்ட சுகாதாரத்துறை இதுபற்றி கண்டுக்கொள்ளாத நிலையே நீடிக்கிறது. இந்நிலை குறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் மருத்துவ பரிசோதனை முடிவுகளும் முறையாக தெரிவிக்கப்படாத நிலை ஏற்பட்டுவிடும் என வருத்தத்துடன் குறிப்பிட்டார். மாவட்ட நிர்வாகம் இந்த நடைமுறையை கண்டு கொள்ளாததும், கண்டிக்காததும் ஏன் என்று தெரியவில்லை. மொத்தத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.


    மதுரையில் நேற்று புதிதாக 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 70 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 105 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 81 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 90 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குணமடைந்தனர். இவர்களுடன் மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 1,054 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

    இதனிடையே மதுரையில் நேற்று 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இவருடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 330 பேர் பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×