search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 92 ஆயிரத்து 740 பேருக்கு மருத்துவபரிசோதனை செய்ததில் 14,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 5,216 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 12,790 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 39 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 289 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த 25 வயது நபர், ஆமத்தூரை சேர்ந்த 28 வயது நபர், பாண்டியன்நகரை சேர்ந்த 60 வயது முதியவர், காந்திநகரை சேர்ந்த 35 வயது நபர், கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த 25 வயது பெண், டி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த 28 வயது நபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த 38 வயது நபர், சிவாநகரை சேர்ந்த 60 வயது முதியவர், அனந்தப்பன்தெருவை சேர்ந்த 28 வயது நபர், 51 வயது நபர், வெள்ளையாபுரத்தை சேர்ந்த 2 பேர், கல்லூரணி, செட்டிக்குறிச்சி, முஷ்டக்குறிச்சி, வரலொட்டி, வத்திராயிருப்பு, பனையூர், வீரசோழன், கருவக்குடி, அருப்புக்கோட்டை, திருவானூர், கன்னிச்சேரிபுதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,530 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,967 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 5,214 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாதநிலை உள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுவது தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் நோய்பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆனாலும் மாவட்டநிர்வாகம் கிராமப்பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதநிலை தொடர்கிறது.மாவட்டம் முழுவதும் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×