என் மலர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்17 Sept 2020 7:50 AM IST (Updated: 17 Sept 2020 7:50 AM IST)
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 6,325 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 4,900 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
13,162 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 27 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 192 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்த 26 வயது பெண், கே.கே.எஸ்.எஸ்.என்.நகரை சேர்ந்த 46 வயது பெண், சூலக்கரை இ.பி.காலனியை சேர்ந்த 51 வயது நபர், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 28 வயது நபர், ஐ.சி.ஏ. காலனியை சேர்ந்த 37 வயது பெண், மேலத்தெருவை சேர்ந்த 40 வயது நபர், நல்லான்செட்டிப்பட்டியை சேர்ந்த 23 வயது பெண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி நாரணாபுரம் சிவன்நகரை சேர்ந்த 64 வயது முதியவர், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த 52 வயது பெண், சாத்தூரை சேர்ந்த 8 பேர், படந்தால், கீழராஜகுலராமன், காடனேரி, நெடுங்குளத்தை சேர்ந்த 3 பேர், மகாராஜபுரம், தம்பிப்பட்டி, ராஜபாளையத்தை சேர்ந்த 2 பேர், காரியாபட்டியை சேர்ந்த 2 பேர், அருப்புக்கோட்டையை சேர்ந்த 2 பேர், சின்னசெட்டிப்பட்டி, கடம்பன்குளம், தொட்டியங்குளம், ரெட்டியப்பட்டி, கணக்கி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,741 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் 4,900 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையில் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளிலேயே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் கிராமப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாத நிலையே நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story
×
X